தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ள Reba Monica John மற்றும் அவரது கணவர் ஜோமன் ஜோசப் தம்பதியருக்கு முதல் குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை நடிகை தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
பிறந்த குழந்தைக்கு 'கியாரா ஜோசப்' (Kiara Joseph) என பெயர் சூட்டியுள்ளதாகவும், குழந்தையுடன் மற்றும் குடும்பத்தினருடன் எடுத்த மனதை கவரும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
2022-ல் திருமணம் செய்து கொண்ட ரீபா மோனிகா ஜான்–ஜோமன் ஜோசப் தம்பதியருக்கு இது முதல் குழந்தையாகும். குழந்தை பிறந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

