நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படம் உலக அளவில் ரூ. 900 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனை படைத்துள்ளதை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள திரையரங்கில் ரசிகர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர்.
ரஜினி ரசிகர் மன்ற ஒன்றிய செயலாளர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த வெற்றி விழாவில், மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட பல ரசிகர்கள் பங்கேற்றனர். திரையரங்கம் முன்பு பட்டாசு வெடித்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர்கள், பின்னர் திரையரங்கில் கேக் வெட்டி, திரைப்படம் காண வந்த பொதுமக்களுக்கு வழங்கினர்.

