பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தியை முன்னிட்டு, தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் திரண்டிருந்த 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், தேவர் வேடமிட்ட சிறுமியுடன் அவர் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்நிகழ்வில் தவெகவின் பல்வேறு நிலை நிர்வாகிகளும் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.


