மதுரை மாவட்டம் தெற்கு வாசல் பகுதியைச் சார்ந்தவர் கோகுல். இவர் இந்தியா முழுவதும் போதைப்பொருள் பழக்கத்தை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் , உலக அமைதியை வலியுறுத்தியும், விவசாயத்தை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தைப் போற்றி அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய தேசம் முழுவதும் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கிராஸ் கண்ட்ரி வாக்கர் முறையில் இவர் தனது நடை பயணத்தை கடந்த 2025 ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் ஏப்ரல் 23ஆம் தேதி துவங்கியுள்ளார். கன்னியாகுமரியில் ஏப்ரல் 23ஆம் தேதி தனது நடை பயணத்தை துவங்கிய கோகுல், கன்னியாகுமரியில் இருந்து கேரளா, கர்நாடகா, கோவா, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு நடைபயணமாக சென்ற அவர் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று போதைப் பொருட்கள் பயன்படுத்துவது எவ்வாறு தடை செய்ய வேண்டும், ராணுவ வீரர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் போன்றவற்றை விழிப்புணர்வாக ஏற்படுத்தி வருகிறார். தேசிய கொடியை ஏந்தியவாறு இவர் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில் இந்த நடை பயணத்தின் ஒருபகுதியாக கோகுல் திருச்சுழி வந்தடைந்தார் . திருச்சுழியில் சிறிது ஓய்வுக்கு பின்பு தனது நடை பயணத்தை இளைஞர் கோகுல் தொடர்ந்தார். மேலும் இந்த நடை பயணம் கன்னியாகுமரியில் வரும் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நிறைவடைய இருப்பதாகவும், இந்தியா முழுவதும் மேற்கொண்டு வரும் தனது நடைபயணம் இரண்டு ஆண்டுகளில் நிறைவடைய வேண்டுமென்ற முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் மதுரை இளைஞர் கோகுல் தெரிவித்தார். பேட்டி : கோகுல் (மதுரை)
செய்திகள்
விவசாயத்தை காப்போம்; போதைப்பொருளை ஒழிப்போம்! – இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளும் மதுரை இளைஞர் திருச்சுழி வந்தடைந்தார்
🕒 14 செப்., 2026, 11:03 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •விவசாயத்தை காப்போம்! இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தை போற்றுவோம் ! போதைப்பொருளை முற்றிலும் ஒழிப்போம்! என்பதை வலியுறுத்தி இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வரும் மதுரையைச் சேர்ந்த இளைஞர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வந்தடைந்தார்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
