சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிFact CheckEmergencyBloodQuizPollsMarketForumsCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/News/ஸ்ரீவில்லிபுத்தூர்: 87 சென்ட் அரசு நெற்கள ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல் – எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு
News

ஸ்ரீவில்லிபுத்தூர்: 87 சென்ட் அரசு நெற்கள ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல் – எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு

The News Outlook
🕒 30 ஜூலை, 2026, 10:50 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: 87 சென்ட் அரசு நெற்கள ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல் – எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுக்குச் சொந்தமான நெற்கள நிலத்தைத் தனியாரிடமிருந்து மீட்டு, மீண்டும் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிற்குட்பட்ட இடையங்குளம் கிராமத்தில் சுமார் 87 சென்ட் பரப்பளவில் அரசு அனாதி நிலம் உள்ளது. இந்த இடமானது சிவந்திப்பட்டி, மம்சாபுரம் மற்றும் வாளைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4,000 ஏக்கரில் பயிரிடப்படும் நெல் വിളச்சலை அறுவடை செய்து, கொட்டி வைத்து உலர்த்துவதற்கான நெற்களமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த அரசு நிலத்தைச் சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, உர மூட்டைகளைச் சேமித்து வைக்கும் கிடங்காக (குடோன்) மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, விளைச்சலைச் சேமிக்கப் போதிய இடவசதி இன்றி, அப்பகுதி விவசாயிகள் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நெல் மணிகளைக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நெற்களத்திற்கு தானியங்களைக் கொண்டு வரும்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மம்சாபுரம் பகுதி விவசாயிகளிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது.

இப்பிரச்சனை குறித்து விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் பிரச்சனைக்குரிய இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு விவசாயிகளுக்கான நெற்களம் மீட்டெடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதுகுறித்து நாகூர் என்ற விவசாயி தெரிவிக்கையில், "எங்கள் பகுதியில் விளையும் 4,000 ஏக்கர் நெல் மணிகளை இந்த இடத்திற்கு கொண்டு வந்துதான் அரசாங்கத்திடம் ஒப்படைத்து வருகிறோம். தற்போது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் நெற்களம் சிக்கியுள்ளதால், எங்களால் எவ்விதப் பணியையும் மேற்கொள்ள முடியவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நெற்களத்திற்கான இடத்தை விவசாயிகளுக்கு மீட்டெடுத்துத் தர வேண்டும்" என வலியுறுத்தினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...