திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி பிரிவு SSS மஹாலில் வெள்ளாளர் முன்னேற்ற சங்கத்தின் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில், சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, புதிய கொடி அறிமுகம் மற்றும் ஆயுட்கால உறுப்பினர்களுக்கு 2027 காலண்டர் மற்றும் தீபாவளி பரிசுகள் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் திரளான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சங்கத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்து நிர்வாகிகள் விரிவாக ஆலோசனை நடத்தினர். மேலும், உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து சிறப்புரையாற்றினர்.

