சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிFact CheckEmergencyBloodQuizPollsMarketForumsCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/Politics/ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மற்றும் உடந்தையாக இருந்த சிறுமியின் தாயையும் கைது செய்து காவல்துறை விசாரணை.
Politics

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மற்றும் உடந்தையாக இருந்த சிறுமியின் தாயையும் கைது செய்து காவல்துறை விசாரணை.

The News Outlook
🕒 29 ஜூலை, 2026, 06:58 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  நபர் மற்றும் உடந்தையாக இருந்த சிறுமியின் தாயையும் கைது செய்து காவல்துறை விசாரணை.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கல்லறை தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் இவருக்கு பொன்லட்சுமி என்ற மனைவி இருந்து வருகிறார். இந்நிலையில் ஜெகநாதன் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருவதாகவும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜெகநாதன் குடும்பத்தினர்கள் ஏராளமானவர்களிடம் சீட்டு பணம் நடத்தி பல கோடி ரூபாய்கள் ஏமாற்றியதும் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை திரும்ப கேட்டால் தனக்கு தமிழக வெற்றிக்கழக அமைச்சர்களை தெரியும் அதிகாரிகளை தெரியும் என்று கூறி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெகநாதன் என்பவர் நந்தினி என்பவரை 2 வதாக திருமணம் செய்ததாகவும், நந்தினி என்பவர் 3 வதாக ஜெகநாதனை திருமணம் செய்துள்ளார். நந்தினிக்கு ஏற்கனவே திருமணமான நபருடன் ஒரு பெண் குழந்தை 4 வயதில் இருப்பதாகவும் கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் நந்தினி ஜெகநாதன் உடன் பழக்கம் ஏற்பட்டு இல்லற வாழ்க்கையில் இருந்ததாகவும் இந்நிலையில் தாயின் உதவியுடன் ஜெகன்நாதன் 4 வயது சிறுமியை அடித்து துன்புறுத்தி பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிறுமியின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கேள்வி எழுப்பிய போது சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை என்றும் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு காயங்களைப் பார்த்த மருத்துவர்கள் சந்தேகம் அடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். குழந்தையை மருத்துவமனையில் போட்டுவிட்டு ஜெகநாதனும் நந்தினியும் தலைமறைவாகியுள்ளனர். பின்னர் சிறுமியின் பாட்டி மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாகியிருந்த ஜெகநாதன் நந்தினி இருவரையும் தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் ஜெகத்பூரில் வைத்து கைது செய்த காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் நான்கு வயது சிறுமியை அடித்து துன்புறுத்தி கைகளை உடைத்து சித்திரவதை செய்து பாலியல் தொல்லை செய்த ஜெகநாதன் இதற்க்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் நந்தினி இருவரிடமும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...