Settings

முகப்பு/விளையாட்டு/இலங்கையை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து – ஹாரி புரூக் அதிரடி சதம்!
விளையாட்டு

இலங்கையை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து – ஹாரி புரூக் அதிரடி சதம்!

🕒 16 செப்., 2026, 10:29 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
இலங்கையை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து – ஹாரி புரூக் அதிரடி சதம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹாரி புரூக் 114 ரன்களும், ஜோஸ் பட்லர் 80 ரன்களும் விளாசினர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் அடங்கும். அவரது சதம் 42 பந்துகளில் நிறைவடைந்தது.

அவருக்கு பக்கபலமாக ஜோஸ் பட்லர் 44 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். இருவரும் இணைந்து 128 ரன்கள் சேர்த்து இங்கிலாந்தின் மிகப்பெரிய ஸ்கோருக்கு அடித்தளமிட்டனர்.

இதையடுத்து 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கம் முதலே பின்னடைவு ஏற்பட்டது. இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய இலங்கை அணி 19 ஓவர்களில் 135 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இங்கிலாந்து தரப்பில் சோனி பேக்கர் 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜேமி ஓவர்டனும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நாளை மறுநாள் கார்டிஃப் நகரில் நடைபெற உள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தேசிய ஏரோபிக்ஸ் போட்டியில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்று சாதனைவிளையாட்டு

தேசிய ஏரோபிக்ஸ் போட்டியில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்று சாதனை

Anandakumar🕒 நவ. 4
போதை விழிப்புணர்வு மாரத்தானில் 5 கி.மீ தூரத்தை அசால்ட்டாக ஓடிக் கடந்த 2-ம் வகுப்பு மாணவி யார் தெரியுமா?விளையாட்டு

போதை விழிப்புணர்வு மாரத்தானில் 5 கி.மீ தூரத்தை அசால்ட்டாக ஓடிக் கடந்த 2-ம் வகுப்பு மாணவி யார் தெரியுமா?

SELLAPPA🕒 நவ. 4
Kimi Antonelli becomes young F1 world championவிளையாட்டு

Kimi Antonelli becomes young F1 world champion

Admin🕒 நவ. 2
இளம் வயதில் F1 உலக சாம்பியன் ஆன கிமி அன்டோனெல்லிவிளையாட்டு

இளம் வயதில் F1 உலக சாம்பியன் ஆன கிமி அன்டோனெல்லி

Admin🕒 நவ. 2
ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி - ஆட்சியர் தொடங்கி வைத்தார்விளையாட்டு

ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி - ஆட்சியர் தொடங்கி வைத்தார்

NESARAJAN🕒 அக். 31
அருள் வந்து ஆடிய சிவாச்சாரியார்கள்! அரியலூர் பாலமுருகன் ஆலயத்தில் பக்திப் பரவசத்தில் பக்தர்கள்ஆன்மீகம்

அருள் வந்து ஆடிய சிவாச்சாரியார்கள்! அரியலூர் பாலமுருகன் ஆலயத்தில் பக்திப் பரவசத்தில் பக்தர்கள்

D Velmurugan🕒 நவ. 15
பக்தி பரவசத்தில் பரமத்திவேலூர்! முருகப்பெருமானின் சூரசம்ஹார நிகழ்வு புகைப்படங்கள்ஆன்மீகம்

பக்தி பரவசத்தில் பரமத்திவேலூர்! முருகப்பெருமானின் சூரசம்ஹார நிகழ்வு புகைப்படங்கள்

SRIDHAR🕒 நவ. 15
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள்: நேரில் கள ஆய்வு மேற்கொண்ட அரியலூர் கலெக்டர்!விவசாயம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள்: நேரில் கள ஆய்வு மேற்கொண்ட அரியலூர் கலெக்டர்!

D Velmurugan🕒 நவ. 15
TNO வாட்ஸ்அப் சானல் ➔