திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த சுண்ணாம்புக்காளை பகுதியைச் சேர்ந்தவர் ராமசந்திரன் (சுரேந்தர் மகன்). இவர் தனது குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீ பற்றி எரிந்தது.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து நாசமாயின. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சிறிது நேரம் போராடி தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

