Settings

முகப்பு/நகரங்கள்/இளையராஜா இசையமைத்த புகழ்பெற்ற கோவிலில் சாமி தரிசனம் செய்த பாடகி ஸ்வேதா!
நகரங்கள்

இளையராஜா இசையமைத்த புகழ்பெற்ற கோவிலில் சாமி தரிசனம் செய்த பாடகி ஸ்வேதா!

🕒 2 நவ., 2026, 04:24 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
இளையராஜா இசையமைத்த புகழ்பெற்ற கோவிலில் சாமி தரிசனம் செய்த பாடகி ஸ்வேதா! - படம் 1
📸1 / 1
✨

AI Highlights

  • •பிரபல பின்னணி பாடகி ஸ்வேதா திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். விரைவில் வெளியாகவுள்ள இளையராஜாவின் கோவில் பாடல்கள் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே இராமலிங்கம்பட்டி போகர் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் பிரபல பின்னணி பாடகி ஸ்வேதா இன்று சாமி தரிசனம் செய்தார்.

திண்டுக்கல் வருகை தந்திருந்த பாடகி ஸ்வேதாவிற்கு கோவில் நிர்வாகம் சார்பில் பாரம்பரிய முறைப்படி பூரண மரியாதைளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 18 படிகள் இறங்கி பாதாள சன்னதிக்குச் சென்ற அவர், பாதாள செம்பு முருகப்பெருமானுக்கு கருங்காலி மாலை அணிவித்து வழிபாடு நடத்தினார். மேலும், கோவில் வளாகத்தில் அமைந்துள்ள 15 அடி உயர சங்கிலி கருப்பசாமி மற்றும் ஜலகண்டேஸ்வரர் சன்னதிகளிலும் அவர் சாமி தரிசனம் செய்தார்.

இக்கோவிலின் சிறப்பு குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், இசையமைப்பாளர் இளையராஜா இத்திருக்கோவிலுக்காக 7 பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். குறிப்பாக, ஒரு தனியார் கோவிலுக்காக இளையராஜா இசையமைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்தப் பாடல்களில் ஒன்றை அவரும் பாடகி ஸ்வேதாவும் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடல்கள் விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், அதற்கான காப்புரிமையை (Copyright) இளையராஜா வழங்கியுள்ளார்.


<றி>பாடகி ஸ்வேதாவின் வருகையைக் அறிந்த அப்பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வருகையால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அவருடன் பக்தர்கள் உற்சாகமாக புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔