Settings

முகப்பு/நகரங்கள்/குடும்பச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பெண்ணைப் பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆட்டோ ஓட்டுநர் கைது
நகரங்கள்

குடும்பச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பெண்ணைப் பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆட்டோ ஓட்டுநர் கைது

🕒 3 நவ., 2026, 04:31 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
குடும்பச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பெண்ணைப் பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆட்டோ ஓட்டுநர் கைது - படம் 1
📸1 / 1
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் விவாகரத்தான பெண்ணிடம் தவறாகப் பேசி பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், குடும்பச் சூழ்நிலையைப் பயன்படுத்தி விவாகரத்தான இளம் பெண்ணிடம் தவறான நோக்கில் பேசி, பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆட்டோ ஓட்டுநரை நகரக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம்பெண் ஒருவர், குடும்பப் பிரச்சனை காரணமாக கணவரைப் பிரிந்து விவாகரத்து பெற்று வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அவர் தனது வீட்டிலிருந்து உமர் சாலையில் உள்ள நியாயவிலைக் கடைக்குப் பொருட்கள் வாங்குவதற்காகச் சென்றுள்ளார். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த ஆம்பூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன் என்பவருடன் அப்பெண் இயல்பாகப் பேசியுள்ளார். அப்போது தனது குடும்ப வறுமை நிலை குறித்தும், விவாகரத்து பெற்றது குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண்ணின் தனிமை மற்றும் ஏழ்மை நிலையைத் தவறாகப் பயன்படுத்த எண்ணிய சரவணன், அவரைப் பாலியல் தொழிலுக்கு அழைக்கும் வகையில் மறைமுகமாகவும் ஆபாசமாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக வீட்டிற்குச் சென்று நடந்த விவரங்களைத் தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி ஆட்டோ ஓட்டுநர் சரவணனைக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஆம்பூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔