Settings

முகப்பு/கல்வி/நேர்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு: சாலையில் கிடைத்த 2 பவுன் நகையை ஒப்படைத்த அரசுப் பள்ளி மாணவர்!
கல்வி

நேர்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு: சாலையில் கிடைத்த 2 பவுன் நகையை ஒப்படைத்த அரசுப் பள்ளி மாணவர்!

🕒 29 அக்., 2026, 10:33 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நேர்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு: சாலையில் கிடைத்த 2 பவுன் நகையை ஒப்படைத்த அரசுப் பள்ளி மாணவர்!

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 4 படங்கள்):

✨

AI Highlights

  • •சாலையில் கிடந்த இரண்டு பவுன் நகையை ஒப்படைத்த மாணவர் தமிழரசனுக்கு குவிந்து வரும் பாராட்டுகள்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் பிடாரம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த பெருமாள் மகன் தமிழரசன். ஆலவயலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பள்ளிக்குப் போகும்போது சாலையில் கிடந்த இரண்டு பவுன் தங்க நகையை பள்ளியின் தலைமையாசிரியர் ஆசிரியரிடம் ஒப்படைத்து அவர்கள் மூலம் பொன்னமராவதி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. சாலையில் கிடந்த இரண்டு பவுன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவர் தமிழரசனை காவல் நிலைய ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை பாராட்டி சால்வை அணிவித்தனர். நல்ல மாணவனை உருவாக்கியதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர். அதேபோல் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் சால்வை அறிவித்ததோடு தொடர்ந்து தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔