Settings

முகப்பு/செய்திகள்/8 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை! 30 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
செய்திகள்

8 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை! 30 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

🕒 3 நவ., 2026, 12:03 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
8 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை!  30 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. - படம் 1
📸1 / 1
✨

AI Highlights

  • •மத்தூர் அருகே 8 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை! 30 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பகுதியைச் சேர்ந்த அருண் (30) என்பவர் போச்சம்பள்ளி சிப்காட்டில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் இந்நிலையில் இவர் எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவனுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மத்தூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பள்ளி மாணவன் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து நேற்று தனது சக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்தத் தகவல் பள்ளித் தலைமையாசிரியரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பள்ளித் தலைமையாசிரியர் குழந்தைகள் நலக் குழு (Child Welfare Committee) தொடர்புடைய துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, புகாரில் தொடர்புடைய அருணை போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவருக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔