Settings

முகப்பு/செய்திகள்/.போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி குறித்த காட்சிகள்..
செய்திகள்

.போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி குறித்த காட்சிகள்..

🕒 3 நவ., 2026, 07:07 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
.போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி குறித்த காட்சிகள்.. - படம் 1
📸1 / 7
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (7)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •ANTI DURGS AWARENESS RALLY VISUAL...mp4

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறையில் மாவட்ட மதுவிலக்கு காவல்துறை சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்த பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு. மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா, மாணவர்கள் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, அவர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி, கோஷங்கள் எழுப்பிச் சென்றனர். நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி, பார்க் அவென்யூ சாலை, கச்சேரி சாலை, காந்திஜி ரோடு, பட்டமங்கலத் தெரு வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார், மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஷ், கலால் உதவி ஆணையர் மாணிக்கராஜ் மற்றும் பள்ளி மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔