சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிFact CheckEmergencyBloodQuizPollsMarketForumsCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/News/காரியாபட்டி அருகே ஆடித் திருவிழா: கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் பணியாரம் எடுத்து விநியோகம்!
News

காரியாபட்டி அருகே ஆடித் திருவிழா: கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் பணியாரம் எடுத்து விநியோகம்!

The News Outlook
🕒 30 ஜூலை, 2026, 04:27 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
காரியாபட்டி அருகே ஆடித் திருவிழா: கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் பணியாரம் எடுத்து விநியோகம்!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சாலைமறைக்குளம் அருள்மிகு ஸ்ரீ தன்னம்மாள் திருக்கோவில் ஆடித் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, கொதிக்கும் நெய்யில் சாமியாடி வெறும் கையால் பணியாரம் எடுத்து பக்தர்களுக்கு வழங்கிய பாரம்பரிய நிகழ்வு பெரும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியது.

ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும் இத்திருவிழா, இந்த ஆண்டு கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் பக்தர்கள் கரகம் எடுத்தல், அக்னிச்சட்டி ஏந்துதல் மற்றும் உருளு தண்டனிடுதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களைச் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று, கொதிக்கும் நெய்யில் பணியாரம் சுட்டு, அதனைச் சாமியாடி தன் வெறும் கைகளால் எடுத்து பக்தர்களுக்கு வழங்கும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியைத் திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

தனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்புச் சாமியாட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சாலைமறைக்குளம் கிராம பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...