விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசு வைத்தான் பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் 17 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும் மாணவர்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ள அங்கன்வாடி மையம். ஆபத்தான கட்டிடத்தில் கல்வி பயிலும் அங்கன்வாடி குழந்தைகள். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட படிக்காசு வைத்தான்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள குழந்தைகளுக்கென கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு பணிகள் 90% நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் லட்சுமியாபுரம் பகுதியில் சுமார் 17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு பணிகள் முடிந்து சுமார் ஒரு வருடத்திற்கு மேலாகியும் இந்த அங்கன்வாடி மையம் குழந்தைகளின் பயன்பாட்டுக்கு இன்னும் வராமல் உள்ளதால் அதே பகுதியில் உள்ள கிராம இ சேவை மையம் அலுவலகத்தில் குறுகியலான ஒரு அறையில் சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். ஒரே அறையில் சமைப்பது ஒரே அறையில் கல்வி இருப்பது என குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக இந்த அங்கன்வாடி மையத்திற்கு கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை என்பது குறைவாக உள்ளதாகவும் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் மேலும் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வராத கட்டிடம் சேதமடைந்து காணப்படுவதாகவும் அதை பராமரித்து தரவேண்டும் எனவும் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரி சிவக்குமார் (Pdo) கேட்டபோது அங்கன்வாடி மையம் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு வர உடனடியாக எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசு வைத்தான் பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் 17 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும் மாணவர்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ள அங்கன்வாடி மையம். ஆபத்தான கட்டிடத்தில் கல்வி பயிலும் அங்கன்வாடி குழந்தைகள்.
The News Outlook
🕒 30 ஜூலை, 2026, 04:46 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
