விருதுநகர் அருகே காமராஜ் பொறியியல் கல்லூரியில் கட்டுமானத் துறையில் திறன்மிக்க தொழிலாளர்களை அடையாளம் கண்டு, அவர்களின் திறமைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் Builders’ Association of India (BAI) – Virudhunagar Centre சார்பில் “BUILD MASTER 2026 – Building Skills, Building Nation” கட்டுமானத் திறன் போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஊட்டி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். அனுபவமிக்க கட்டுமானத் தொழிலாளர்களுடன் PSR கல்வி நிறுவனங்கள், MEPCO மற்றும் அரசு ITI உள்ளிட்ட கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களும் போட்டிகளில் கலந்துகொண்டனர்.
10 பிரிவுகளில் திறன் போட்டி
Masonry, Bar Bending, Carpentry, Plumbing & Electrical, Painting, Welding, Tiles Laying, Shuttering, Backhoe Loader Machine Operation மற்றும் Architectural / Survey & Engineering Design என கட்டுமானத் துறையின் 10 முக்கியப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
போட்டியாளர்களின் செய்முறைத் திறன், தொழில்நுட்ப அறிவு, துல்லியம், பணித்தரம், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நேர மேலாண்மை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் திறமைகள் மதிப்பீடு செய்யப்பட்டன.
பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட தொழிலாளர்களும், தொழில்நுட்பக் கல்வி பயிலும் இளைஞர்களும் ஒரே களத்தில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியது நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக அமைந்தது.
ஒரே நாளில் 200 தொழிலாளர்கள் நலவாரிய அட்டைக்கு விண்ணப்பம்
BUILD MASTER 2026 போட்டியுடன் மட்டுமின்றி, கட்டுமானத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சி நடைபெற்ற ஒரே நாளில் சுமார் 200 கட்டுமானத் தொழிலாளர்கள் தொழிலாளர் நலவாரிய அட்டைக்காக விண்ணப்பித்தனர். TVK Labour Welfare Wing-ன் உதவி மற்றும் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற சிறப்பு முகாமில், தொழிலாளர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு விண்ணப்ப செயல்முறைக்கும் உதவி செய்யப்பட்டது.
BAI நிர்வாகிகள் பங்கேற்பு
நிகழ்ச்சியில் Builders’ Association of India State Chairman N. ராமலிங்கம், BAI All India Trustee L. வெங்கடேசன், BAI Madurai Centre Chairman உள்ளிட்ட மாநில மற்றும் மைய நிர்வாகிகள் கலந்து கொண்டு போட்டியாளர்களை ஊக்குவித்தனர்.
BAI Virudhunagar Centre உறுப்பினர்களுடன் Civil Engineering Association, Virudhunagar மற்றும் JCI Virudhunagar Elite ஆகிய அமைப்புகளும் நிகழ்ச்சி திட்டமிடல் மற்றும் கள ஒருங்கிணைப்பில் பங்காற்றினர்.
வெற்றியாளர்களுக்கு பரிசுகள்
போட்டிகளின் நிறைவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் S.P. செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றியாளர்களை கௌரவித்தார். Civil Engineering Association-ஐச் சேர்ந்த Er. சிவகுமார் மற்றும் Er. சுரேஷ் குமார் ஆகியோரும் வெற்றியாளர்களைப் பாராட்டினர்.
தினசரி பணிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் கட்டுமானத் தொழிலாளர்கள் பொது மேடையில் வெற்றியாளர்களாக கௌரவிக்கப்பட்டது நிகழ்ச்சியின் முக்கிய தருணமாக அமைந்தது.
“Skilled Labour” அல்ல; “Skilled Professional”
திறன்மிக்க தொழிலாளர்களை வெறும் “Labour” என்ற அடையாளத்தில் பார்க்காமல், “Skilled Professional” என்ற மரியாதைக்குரிய அடையாளத்துடன் அணுக வேண்டும் என்பதையும், திறன் சார்ந்த தொழில்கள் இளம் தலைமுறைக்கு மதிப்புமிக்க வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவுக்கான பாதையாக அமைய முடியும் என்பதையும் BUILD MASTER 2026 வலியுறுத்தியது.
500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு, பல மாவட்டங்களின் பிரதிநிதித்துவம், மாணவர்களின் ஆர்வம் மற்றும் ஒரே நாளில் சுமார் 200 தொழிலாளர்களின் நலவாரிய அட்டை விண்ணப்பம் ஆகியவற்றின் மூலம், தொழிலாளர் திறன் அங்கீகாரத்தையும் நலனையும் ஒருங்கிணைத்த முயற்சியாக BUILD MASTER 2026 அமைந்தது.

