விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்புச் சந்திப்பில், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S.P. செல்வம் பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
இச்சந்திப்பின் போது திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு, தங்கள் பகுதிகளில் நிலவும் அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு உள்ளூர் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளைச் சட்டமன்ற உறுப்பினரிடம் முன்வைத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவர், பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு, விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

