Settings

முகப்பு/செய்திகள்/கணவர் கொடுமை: ஆட்சியர் அலுவலகத்தில் மகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி!
செய்திகள்

கணவர் கொடுமை: ஆட்சியர் அலுவலகத்தில் மகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி!

🕒 23 நவ., 2026, 06:14 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கணவர் கொடுமை: ஆட்சியர் அலுவலகத்தில் மகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருப்பத்தூரில் கணவரின் கொடுமை மற்றும் காவல் துறையின் மெத்தனத்தால், ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தனது மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கணவரின் கொடுமை மற்றும் காவல் துறையினரின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, பெண் ஒருவர் தனது மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அருகே உள்ள சு.பள்ளிப்பட்டு, அண்ணா நகரைச் சேர்ந்தவர் அரசு (43). கட்டிடத் தொழிலாளியான இவருக்கும், தர்மபுரியைச் சேர்ந்த ரத்தினா (38) என்பவருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அரசு மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, ரத்தினாவை ஆபாசமாகத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ரத்தினா, கந்திலி மற்றும் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரத்தினா, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்குத் தனது மகளுடன் வருகை தந்தார்.

திடீரென, தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயைத் தன் மீதும், தன் மகள் மீதும் ஊற்றி ரத்தினா தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்ட பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர், உடனடியாகச் செயல்பட்டு இருவரையும் தடுத்து நிறுத்தி மீட்டனர். பின்னர், தனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் ரத்தினா மனு அளித்தார். இந்தச் சம்பவம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
திரிஷாவுக்கு 'இளைய புரட்சித்தலைவி' பட்டம்! திருநெல்வேலியில் அதிரடி தொடக்கம்செய்திகள்

திரிஷாவுக்கு 'இளைய புரட்சித்தலைவி' பட்டம்! திருநெல்வேலியில் அதிரடி தொடக்கம்

Vijayaragavan🕒 நவ. 23
மிருகண்டா நதி அணை நிலவரம்: இன்றைய நீர் இருப்பு விவரம்செய்திகள்

மிருகண்டா நதி அணை நிலவரம்: இன்றைய நீர் இருப்பு விவரம்

Manimaran🕒 நவ. 23
மழை பொழிய வேண்டி 30 யாக குண்டங்களுடன் நடந்த பிரம்மாண்ட யாகம் - திரண்ட பக்தர்கள்!செய்திகள்

மழை பொழிய வேண்டி 30 யாக குண்டங்களுடன் நடந்த பிரம்மாண்ட யாகம் - திரண்ட பக்தர்கள்!

SASHVI🕒 நவ. 23
மலைப் பகுதி முழுக்க சிசிடிவி கேமராக்கள்! திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவிற்குப் பலத்த பாதுகாப்பு!செய்திகள்

மலைப் பகுதி முழுக்க சிசிடிவி கேமராக்கள்! திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவிற்குப் பலத்த பாதுகாப்பு!

Vijay🕒 நவ. 23
தூங்கிக் கொண்டிருந்த கணவரை அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்த மனைவி கைது!செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்த கணவரை அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்த மனைவி கைது!

MSD🕒 நவ. 23
கார்த்திகை தீபம் நெருங்கும் நிலையில் திருப்பத்தூரில் களைகட்டிய அகல்விளக்குகள் மற்றும் பூக்கள் விற்பனை!நகரங்கள்

கார்த்திகை தீபம் நெருங்கும் நிலையில் திருப்பத்தூரில் களைகட்டிய அகல்விளக்குகள் மற்றும் பூக்கள் விற்பனை!

ARAVINDHAN🕒 நவ. 23
உச்ச நீதிமன்றம் சொல்லியும் தீபம் ஏற்ற மறுப்பது ஏன்? கொந்தளிக்கும் நைனார் நாகேந்திரன்!அரசியல்

உச்ச நீதிமன்றம் சொல்லியும் தீபம் ஏற்ற மறுப்பது ஏன்? கொந்தளிக்கும் நைனார் நாகேந்திரன்!

Anandakumar🕒 நவ. 23
இறுதிச் சடங்கில் கொடூர கொலை: திருப்பத்தூரில் அதிரடி நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்!நகரங்கள்

இறுதிச் சடங்கில் கொடூர கொலை: திருப்பத்தூரில் அதிரடி நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்!

ARAVINDHAN🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔