திருச்சி மாநகராட்சி கட்டுமான பொறியாளர்கள் சங்கம், மாநகராட்சி இணைந்து அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்து பொதுமக்களுக்கு இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அன்பழகன் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
திருச்சி மாநகராட்சி கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் கட்டுமான பொறியாளர்கள் சங்கத் தலைவர் விஸ்வநாத், மாநகராட்சி சுகாதார அலுவலர் கார்த்திகேயன், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் ஷேக் அப்துல்லா, முன்னாள் தலைவர் கார்த்திக் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
இருசக்கர வாகன பேரணி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் துவங்கி தலைமை தபால் நிலையம், மேலபுதூர், பாலக்கரை, மதுரை சாலை, சத்திரம் பேருந்து நிலையம், கரூர் புறவழிச்சாலை, தில்லைநகர் பிரதான சாலை, தென்னூர் நெடுஞ்சாலை, புத்தூர் சந்திப்பு, நீதிமன்றம் வழியாக மீண்டும் மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் பொதுமக்களிடையே பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வை பொறியாளர்கள் ஏற்படுத்தினார்கள்.
பேட்டி - விஸ்வநாத், தலைவர்.

