திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டு குறுவை சாகுபடி 1,15 847 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்றது இதுவரை ஒரு லட்சத்து 4,175 ஏக்கர் பரப்பளவில் அறுவடை பணிகள் முடிவடைந்து விட்டன. மேலும் 11,672 ஏக்கர் அறுவடை நடைபெற வேண்டிய நிலையில் இதுவரை 59 266 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் அறுவடை செய்யப்பட்டு வரும் நெல்மணிகளை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரும் நிலையில், ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்புக் கிடங்குகளுக்கும் அரவைப் பணிகளுக்கும் இயக்கம் செய்யப்படாத காரணத்தால் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கி கிடக்கின்றன. இதுவரை சுமார் முப்பதாயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் இருப்பு உள்ள காரணத்தால், எஞ்சியுள்ள விவசாயிகளின் நெல்மணிகளும் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து சேதம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது எனவே, நேரடி கெள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வலியுறுத்தி கடந்த 6.10.26 அன்று நன்னிலம் வட்டாட்சியர் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையின் முடிவினை அமல்படுத்தாததை கண்டித்து இந்திய தொழில் சங்கம் சிஜடியு சார்பில் திருவாரூர் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
அரசியல்
நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வலியுறுத்தி சிஐடியு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
🕒 30 அக்., 2026, 10:31 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வலியுறுத்தி சிஐடியு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
