Settings

முகப்பு/ஆன்மீகம்/மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீ ஓம் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம் :-
ஆன்மீகம்

மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீ ஓம் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம் :-

🕒 29 அக்., 2026, 05:09 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஓம் வரசித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதையொட்டி, விநாயகருக்கு பால், பன்னீர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, விநாயகருக்கு அறுகம்புல் மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பஞ்சமுக மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, விநாயகரை வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔