Settings

முகப்பு/நகரங்கள்/கோவில்பட்டியில் 330 கிலோ குட்கா பறிமுதல், 3 பேர் கைது
நகரங்கள்

கோவில்பட்டியில் 330 கிலோ குட்கா பறிமுதல், 3 பேர் கைது

🕒 29 அக்., 2026, 11:26 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கோவில்பட்டியில் 330 கிலோ குட்கா பறிமுதல், 3 பேர் கைது
✨

AI Highlights

  • •கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 330 கிலோ குட்கா மற்றும் ரூ.42,000 ரொக்கத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 330 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் பேரில், மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (ANTF) காவல்துறையினர் தீவிர ரோந்து மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த காரை சோதனையிட்டனர்.

இந்த சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட 330 கிலோ குட்கா இருப்பது கண்டறிப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ரூ. 42,000 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கோவில்பட்டி சுபா நகரைச் சேர்ந்த ஜெயராமன் மகன் செல்வ மாரியப்பன் (45), செந்தூர்பாண்டி மகன் மகேஷ் (35) மற்றும் மேலசெய்தலையைச் சேர்ந்த சுடலைமணி மகன் முத்துவேல் (40) ஆகிய மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔