Settings

முகப்பு/நகரங்கள்/மயிலாடுதுறையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
நகரங்கள்

மயிலாடுதுறையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

🕒 29 அக்., 2026, 05:19 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மயிலாடுதுறையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
✨

AI Highlights

  • •மயிலாடுதுறையில் தமிழக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறையில் தமிழக வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்ட செயலாளர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வட்ட பொருளாளர் கணேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் து.இளவரசன், மாவட்ட செயலாளர் து.விஜயராகவன் மற்றும் அரசு ஊழியர் சங்க துணைத் தலைவர் தென்னரசு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.

முக்கிய கோரிக்கைகள்:

  • சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அனைத்து நிலை அலுவலர்களுக்கும் காலம் தாழ்த்தாமல் மதிப்பூதியம் வழங்க வேண்டும்.
  • சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணிகளில் ஈடுபட்ட அனைத்து அலுவலர்களுக்கும் ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும்.
  • தேர்தல் மற்றும் எஸ்ஐஆர் பணிகளுக்காக செலவிடப்பட்ட சில்லரை செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை நிலுவையின்றி முழுமையாக வழங்க வேண்டும்.
  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கீழ் உள்ள நில எடுப்பு அலகுகள் மற்றும் கலால் பிரிவு உள்ளிட்ட அனைத்து தற்காலிக பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாதந்தோறும் குறித்த தேதியில் ஊதியம் வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அலுவலர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔