தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக வடபாகம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருந்த மாதவநாயர் காலனி பகுதியைச் சேர்ந்த நட்டார் என்பவரது மகன் கணேசன் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 40 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
