Settings

முகப்பு/நகரங்கள்/அதிர்ச்சி: குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கிய 75 வருட பழமையான குடிநீர் கிணறு!
நகரங்கள்

அதிர்ச்சி: குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கிய 75 வருட பழமையான குடிநீர் கிணறு!

🕒 3 நவ., 2026, 09:39 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அதிர்ச்சி: குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கிய 75 வருட பழமையான குடிநீர் கிணறு! - படம் 1
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 75 ஆண்டுகள் பழமையான குடிநீர் கிணறு பராமரிப்பின்றி குப்பைகள் மற்றும் கழிவுநீருடன் காணப்படுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளக்குட்டை ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அமைந்துள்ள 75 ஆண்டுகள் பழமையான குடிநீர் கிணறு, போதிய பராமரிப்பின்றி முட்புதர்கள் சூழ்ந்து சிதிலமடைந்து காணப்படுகிறது.

பல தலைமுறைகளாக இப்பகுதி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கிய இந்த கிணறு, தற்போது உரிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. அருகில் சிறிய சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டு காவிரி கூட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டாலும், குடிநீர் கிடைக்காத காலங்களில் பொதுமக்கள் இந்த கிணற்று நீரையே நம்பியுள்ளனர்.

இந்நிலையில், பயன்பாட்டை இழந்த நிலையில் உள்ள இக்கிணற்றில் குப்பைகள் மற்றும் இறந்த விலங்குகள் வீசப்படுவதால், குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் அப்பகுதி மக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் கடுமையான நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிணற்றைச் சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி, தூர்வாரி, கிணற்றின் மீது பாதுகாப்பு வலை (ஜால்) அமைப்பதுடன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியுடன் இணைத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மனு அளிக்கப்பட்ட போதிலும், அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், சட்டமன்ற உறுப்பினரும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔