மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கச்சிராயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட க.புதூரில், சட்டவிரோதமாகச் செயல்படுவதாகக் கூறப்படும் ஆடுதுறை கல்குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கிராம மக்கள் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் பெண்களும் குழந்தைகளும் பெருமளவில் கலந்துகொண்டு, கல்குவாரியை உடனடியாக மூடக்கோரி முழக்கங்களை எழுப்பினர். குவாரியை மூடுவது தொடர்பாக அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை போராட்டம் தொடரும் என்று கிராம மக்களும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

