Settings

முகப்பு/நகரங்கள்/மின்வாரிய வயர் திருட்டு முதல் ஏற்றுமதி வரை: அணைக்கட்டு விவசாயிகள் வைத்த அதிரடி கோரிக்கைகள்!
நகரங்கள்

மின்வாரிய வயர் திருட்டு முதல் ஏற்றுமதி வரை: அணைக்கட்டு விவசாயிகள் வைத்த அதிரடி கோரிக்கைகள்!

🕒 3 நவ., 2026, 02:17 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மின்வாரிய வயர் திருட்டு முதல் ஏற்றுமதி வரை: அணைக்கட்டு விவசாயிகள் வைத்த அதிரடி கோரிக்கைகள்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ச.மகேஷ்வரி தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா அலுவலக கூட்டரங்கில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் ச.மகேஷ்வரி தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பழனி, வட்ட வழங்கல் அலுவலர் கீதா, தலைமையிடத்து துணை தாசில்தார் ரமேஷ், தலைமை நில அளவர் ஜெயகார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுடன், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:

  • ஊர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய பம்புசெட்டுகளுக்கு மின்சாரம் கொண்டு செல்லும் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் செல்வதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. இத்தகையவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • அணைக்கட்டு தாலுகாவில் அதிக அளவில் முருங்கை சாகுபடி செய்யப்படுவதால், முருங்கைக்கீரையை பவுடராக தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • விவசாய நிலங்களில் பயிர்களுக்கு இடையே முளைக்கும் களைச் செடிகளைக் கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் உதவ வேண்டும்.
  • அணைக்கட்டு தாலுகாவில் நடைபெற்ற ஜமாபந்தியில் விவசாயிகள் அளித்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • அகரம் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற வேண்டும்.
  • விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விரைந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தாசில்தார் மகேஷ்வரி உறுதியளித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பக்தி பரவசத்தில் திருச்சி வயலூர்! கந்த சஷ்டி விழாவில் கோலாகலமாக நடைபெற்ற சக்தி வேல் வாங்கும் வைபவம்!நகரங்கள்

பக்தி பரவசத்தில் திருச்சி வயலூர்! கந்த சஷ்டி விழாவில் கோலாகலமாக நடைபெற்ற சக்தி வேல் வாங்கும் வைபவம்!

MSD🕒 நவ. 15
மேகதாது விவகாரம்: தமிழகத்திற்கு எதிராக மத்திய-கர்நாடக அரசுகள் சதி - வைகோ குற்றச்சாட்டு!நகரங்கள்

மேகதாது விவகாரம்: தமிழகத்திற்கு எதிராக மத்திய-கர்நாடக அரசுகள் சதி - வைகோ குற்றச்சாட்டு!

Vijayaragavan🕒 நவ. 15
நெகிழ்ச்சி! 75 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி அசத்திய தவெக நிர்வாகிகள்நகரங்கள்

நெகிழ்ச்சி! 75 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி அசத்திய தவெக நிர்வாகிகள்

Vijayaragavan🕒 நவ. 15
பழனி திருஆவினன்குடி கோயிலில் களைகட்டிய பாரம்பரிய 'தண்டு விரதம்'!நகரங்கள்

பழனி திருஆவினன்குடி கோயிலில் களைகட்டிய பாரம்பரிய 'தண்டு விரதம்'!

VASANTHA🕒 நவ. 15
பனிமூடத்தில் மூழ்கிய வேலூர் கோட்டை! முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் சென்ற வாகன ஓட்டிகள்நகரங்கள்

பனிமூடத்தில் மூழ்கிய வேலூர் கோட்டை! முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் சென்ற வாகன ஓட்டிகள்

Srinivasan🕒 நவ. 15
அருள் வந்து ஆடிய சிவாச்சாரியார்கள்! அரியலூர் பாலமுருகன் ஆலயத்தில் பக்திப் பரவசத்தில் பக்தர்கள்ஆன்மீகம்

அருள் வந்து ஆடிய சிவாச்சாரியார்கள்! அரியலூர் பாலமுருகன் ஆலயத்தில் பக்திப் பரவசத்தில் பக்தர்கள்

D Velmurugan🕒 நவ. 15
பக்தி பரவசத்தில் பரமத்திவேலூர்! முருகப்பெருமானின் சூரசம்ஹார நிகழ்வு புகைப்படங்கள்ஆன்மீகம்

பக்தி பரவசத்தில் பரமத்திவேலூர்! முருகப்பெருமானின் சூரசம்ஹார நிகழ்வு புகைப்படங்கள்

SRIDHAR🕒 நவ. 15
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள்: நேரில் கள ஆய்வு மேற்கொண்ட அரியலூர் கலெக்டர்!விவசாயம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள்: நேரில் கள ஆய்வு மேற்கொண்ட அரியலூர் கலெக்டர்!

D Velmurugan🕒 நவ. 15
TNO வாட்ஸ்அப் சானல் ➔