திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாக்ஷி மகளிர் கல்லூரியில் அன்பு தாய் அறக்கட்டளை சார்பில் மாணவிகளுக்கான சட்டம், சுகாதாரம் மற்றும் தொழில் வழிகாட்டுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அன்பு தாய் அறக்கட்டளையின் மாநிலச் செயலாளர் பி.கமலி, மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.சண்முகப்பிரியா மற்றும் திருப்பூர் மாவட்டச் செயலாளர் தெ.பவதாரணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மாணவிகளுக்குப் பாதுகாப்புச் சட்டங்கள், உடல்நலம் மற்றும் எதிர்காலத் தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

