ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவில் உள்ள சங்குமால் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பைத் தடுக்கும் தற்காலிகப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
சங்குமால் கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் காரணமாகச் சாலைகள் அரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்பகுதி பொதுமக்கள் ராமேஸ்வரம் நகர் மன்றத் தலைவர் நாசர் கானிடம் கோரிக்கை மனு அளித்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இப்பகுதியில் கடல் அரிப்பைத் தற்காலிகமாகத் தடுக்கும் வகையில் ராட்சத பாறைகளைக் கொட்டும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



