Settings

முகப்பு/நகரங்கள்/சீர்காழி பள்ளி அருகில் குப்பைகளால் டெங்கு அபாயம்
நகரங்கள்

சீர்காழி பள்ளி அருகில் குப்பைகளால் டெங்கு அபாயம்

🕒 29 அக்., 2026, 06:55 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
✨

AI Highlights

  • •மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி மேல்நிலைப் பள்ளி அருகே தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் கழிவுநீரால் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வடக்கு மடவிளாகத்தில் அமைந்துள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் அருகில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் கழிவுநீரால் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தப் பள்ளியில் சுமார் 340 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். போதிய இடவசதி மற்றும் காற்றோட்டமின்றி இயங்கிவரும் இ்ப்பள்ளியின் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் அதிக அளவிலான குப்பைகளும், நெகிழிக் கழிவுகளும் பல மாதங்களாக அகற்றப்படாமல் கொட்டப்பட்டுள்ளன. தற்போது பெய்துவரும் மழையால், அங்குள்ள தேங்காய் சிரட்டைகள் மற்றும் தேநீர் குவளைகளில் மழைநீர் தேங்கி கொசுப் புழுக்கள் பெருமளவில் உருவாகியுள்ளன. வகுப்பறைகள் இதற்கு அருகிலேயே உள்ளதால், மாணவ, மாணவிகளுக்கு டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் எழுந்துள்ளது.

மேலும், அப்பகுதியில் குடியிருப்பு கழிவுநீர் குழாய்கள் பழுதடைந்து பள்ளி சுற்றுச்சுவர் ஓரத்தில் தேங்கி நிற்பதால் கடுமையான சுகாதாரச் சீர்கேடும், துர்நாற்றமும் நிலவுகிறது. இதனால் மாணவர்கள் சுகாதாரமற்ற சூழலில் கல்வி கற்கும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து கல்விக் குழு உறுப்பினரும், பெற்றோருமான வைத்தியநாதன் கூறுகையில், "இந்த பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து கற்கும் சூழல் உள்ளது. தற்போது பள்ளி அருகே குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்கியுள்ளதால், கொசுக்கள் உற்பத்தியாகி மாணவ, மாணவிகளுக்கு டெங்கு தொற்று பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இந்தச் சிக்கலைச் சீரமைக்க வேண்டும்" என்றார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔