தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடன் தொல்லை காரணமாக தனது இரண்டு குழந்தைகளைக் கிணற்றில் வீசிக் கொன்ற தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவில்பட்டி இலுப்பையூரணி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் தேவிகுமார் (43). கடந்த 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான கடன் தொல்லை காரணமாக இவர் தனது இரண்டு குழந்தைகளைக் கிணற்றில் வீசிக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தூத்துக்குடி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் எண்-1 இல் நீதிபதி தாண்டவன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, தேவிகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

