கோவையில் உள்ள கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் நீண்ட நாட்களுக்குப் பிறகு குளிக்க மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வனத்துறை அருவியில் குளிக்கத் தடை விதித்திருந்தது.
தற்போது அப்பகுதியில் மழைப்பொழிவு குறைந்து, நீர்வரத்து சீராகியுள்ளதை அடுத்து, சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

