திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நியூ டவுன் பகுதியில் இயங்கி வரும் நியாய விலை கடையில், பொருட்கள் முறைகேடாக வெளியே கொண்டு செல்லப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், பறக்கும் படை அதிகாரிகள் இன்று அக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது, நியாய விலை கடை விற்பனையாளருக்குப் பதிலாக வேறு நபர் அமர்ந்து பொதுமக்களுக்குப் பொருட்களை விநியோகித்து வந்தது கண்டறியப்பட்டது. இதனைக் கண்ட அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கை விடுத்ததுடன், கடையில் உள்ள உணவுப் பொருட்கள் மற்றும் பதிவேடுகளின் இருப்பையும் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

