Settings

முகப்பு/நகரங்கள்/வேலி அகற்றம்... மைக்கை பிடுங்கிய டிஎஸ்பி... திருவாரூரில் கொதித்தெழுந்த பெற்றோர்கள்!
நகரங்கள்

வேலி அகற்றம்... மைக்கை பிடுங்கிய டிஎஸ்பி... திருவாரூரில் கொதித்தெழுந்த பெற்றோர்கள்!

🕒 3 நவ., 2026, 09:19 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வேலி அகற்றம்... மைக்கை பிடுங்கிய டிஎஸ்பி... திருவாரூரில் கொதித்தெழுந்த பெற்றோர்கள்! - படம் 1
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவாரூர் அருகே பள்ளி வளாக பாதுகாப்பு வேலி அகற்றப்பட்டதைக் கண்டித்து மாணவர்களுடன் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவாரூர் மாவட்டம் புலிவலம் கடைவீதி பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளி வளாகத்தின் பாதுகாப்பு வேலி அகற்றப்பட்டதைக் கண்டித்து, மாணவர்களுடன் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் அமைக்கப்பட்டிருந்த இந்த வேலி, இந்து சமய அறநிலையத்துறையால் அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகக் குற்றம்சாட்டிய பெற்றோர்கள், அப்பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் மைக்கில் புகார்களைத் தெரிவித்தபோது, டிஎஸ்பி அவரிடமிருந்து மைக்கைப் பறித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குழந்தைகளுக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர்கள் தெரிவித்த நிலையில், காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔