Settings

முகப்பு/நகரங்கள்/நடுரோட்டில் நின்ற அரசு பேருந்து... கைத்தாங்கலாக தள்ளிய மக்கள் - நெல்லையில் சுவாரஸ்சியம்!
நகரங்கள்

நடுரோட்டில் நின்ற அரசு பேருந்து... கைத்தாங்கலாக தள்ளிய மக்கள் - நெல்லையில் சுவாரஸ்சியம்!

🕒 3 நவ., 2026, 10:16 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நடுரோட்டில் நின்ற அரசு பேருந்து... கைத்தாங்கலாக தள்ளிய மக்கள் - நெல்லையில் சுவாரஸ்சியம்! - படம் 1
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை பொதுமக்களின் உதவியுடன் காவல்துறையினர் தள்ளி ஓரம்கட்டியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து பாளையங்கோட்டை மேட்டுத்தடலை நோக்கிச் சென்ற மகளிர் இலவசப் பயணப் பேருந்து, வண்ணாரப்பேட்டை பிரதான சாலையில் திடீரென பழுதாகி நடுவழியிலேயே நின்றது.

காலை நேர நெரிசலான நேரத்தில் பேருந்து நின்றதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த போக்குவரத்து காவல்துறையினர், பொதுமக்கள் மற்றும் பயணிகளின் உதவியுடன் பழுதான பேருந்தைத் தள்ளிச் சாலையோரம் ஓரங்கட்டினர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. பின்னர், வண்ணாரப்பேட்டை பணிமனையில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் மூலம் பேருந்து பழுதுநீக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔