புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டை அருகே விறகு ஏற்றிச் சென்ற லாரி சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலை கடந்த ஓராண்டு காலமாக நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதில் விபத்து நிகழ்ந்த வல்லத்திராக்கோட்டை பகுதிப் பணிகள் ஆறு மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், இப்பகுதியில் சென்ற விறகு லாரி எதிர்பாராதவிதமாக நடுப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது.
இந்த விபத்தில் லாரியிலிருந்த விறகுகள் சாலையில் சரிந்து விழுந்தன. விபத்து குறித்து தகவல் அறிந்த வல்லத்திராக்கோட்டை காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்குச் சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

