Settings

முகப்பு/நகரங்கள்/நாகை மாவட்டத்தில் விடிய விடிய வாகனச் சோதனை: எஸ்பி நேரில் ஆய்வு
நகரங்கள்

நாகை மாவட்டத்தில் விடிய விடிய வாகனச் சோதனை: எஸ்பி நேரில் ஆய்வு

🕒 3 நவ., 2026, 04:28 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நாகை மாவட்டத்தில் விடிய விடிய வாகனச் சோதனை: எஸ்பி நேரில் ஆய்வு - படம் 1
📸1 / 1
✨

AI Highlights

  • •நாகப்பட்டினம் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமண்ய பாலச்சந்திரா தலைமையில் தீவிர வாகனச் சோதனை மற்றும் ஆய்வு.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாகப்பட்டினம் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமண்ய பாலச்சந்திரா உத்தரவின் பேரில் தீவிர வாகனச் சோதனைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

நேற்று நள்ளிரவு முதல் மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்தில் கடல் வழியாகப் போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார். மேலும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் நடவடிக்கைகளைக் கண்காணித்து, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் நடைபெறும் சோதனைகளையும் அவர் பார்வையிட்டார். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட எல்லையான வாஞ்சூர் சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட அவர், மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களை முழுமையாகச் சோதனையிடவும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல்களைப் பொதுமக்கள் 24 மணி நேரமும் காவல்துறையினருக்குத் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔