Settings

முகப்பு/நகரங்கள்/திருப்பத்தூரில் பரபரப்பு: இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மூதாட்டியைத் தாக்கி நகை பறிக்க முயற்சி
நகரங்கள்

திருப்பத்தூரில் பரபரப்பு: இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மூதாட்டியைத் தாக்கி நகை பறிக்க முயற்சி

🕒 4 நவ., 2026, 07:42 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருப்பத்தூரில் பரபரப்பு: இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மூதாட்டியைத் தாக்கி நகை பறிக்க முயற்சி - படம் 1
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் அருகே அதிகாலையில் ஏரிக்கரைக்குச் சென்ற மூதாட்டியைத் தாக்கி நகை பறிக்க முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், ராவத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (61). இவர் இன்று அதிகாலை 5.45 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரைக்குச் சென்றபோது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் அவரைத் தாக்கி, கழுத்தில் இருந்த தாலியைப் பறிக்க முயன்றுள்ளார்.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததைக் கண்ட மர்ம நபர், இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்தத் தாக்குதலில் சரஸ்வதிக்கு பற்கள் உடைந்தும், கண்ணில் காயமும் ஏற்பட்டுள்ளது. அவர் திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பி ஓடிய மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔