Settings

முகப்பு/நகரங்கள்/ஆம்பூரில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்!
நகரங்கள்

ஆம்பூரில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

🕒 30 அக்., 2026, 10:46 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஆம்பூரில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்!
✨

AI Highlights

  • •சென்னை மற்றும் பிற பகுதிகளில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், குற்றவாளிகள் மீது உபா சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரியும் ஆம்பூரில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் மற்றும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியதோடு, அங்கிருந்த இமாமைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது உபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரப்பட்டது. மேலும், வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், வடபழனி மற்றும் பிற பகுதிகளிலும் இதுபோன்ற பள்ளிவாசல் தாக்குதல் சம்பவங்கள் தொடர்வதாகவும் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டினர்.

இதுபோன்ற தொடர் சம்பவங்கள் குறித்து தமிழக அரசு மௌனம் காக்காமல் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி, ஆம்பூர் காதர்பேட்டை மசூதி எதிரில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்த பின்னர் திரண்ட இஸ்லாமியர்கள் கைகளில் கண்டன பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் சார்பில் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளும், ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔