தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள வடகரை அடவி நைனார் அணைக்கட்டுப் பகுதியில், வனத்துறையினர் மற்றும் அதிரடி கமாண்டோ வீரர்கள் இணைந்து தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையேயான மோதல்களைத் தடுப்பது மற்றும் அவசரகாலச் சூழல்களை எதிர்கொள்வது குறித்து இக்கூட்டுக் பயிற்சியின் போது வனத்துறையினருக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன.
சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த அதிரடி கமாண்டோ படையினர் அளித்த இந்தப் பயிற்சியில், ஆறுகளைக் கடத்தல், கயிறு ஏறுதல், இரவு நேர ரோந்துப் பணி, முதலுதவி அளித்தல், துப்பாக்கி சுடுதல் மற்றும் ஆயுதங்களைக் கையாளுதல் போன்ற பல்வேறு திறன்கள் குறித்து விளக்கப்பட்டன.
மேலும், வனவிலங்குகளால் ஏற்படும் காயங்களுக்கு உடனடி சிகிச்சையளிப்பது குறித்தும், குறிப்பாக யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து எதிர்கொள்வது தொடர்பாகவும் செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இப்பயிற்சியில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான வனத்துறையினர் கலந்துகொண்டனர்.

