Settings

முகப்பு/நகரங்கள்/மயிலாடுதுறை கூறைநாடு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் கோலாகலம்!
நகரங்கள்

மயிலாடுதுறை கூறைநாடு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் கோலாகலம்!

🕒 1 நவ., 2026, 05:27 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மயிலாடுதுறை கூறைநாடு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் கோலாகலம்!

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 4 படங்கள்):

✨

AI Highlights

  • •மயிலாடுதுறை கூறைநாடு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கோயிலில், பழமை மாறாமல் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, கடந்த 30ஆம் தேதி முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின.

நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயில் விமானத்தை அடைந்தனர்.

வேத விற்பன்னர்களின் மந்திர முழக்கங்களுக்கு மத்தியில் கோயில் விமான கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் மூலவர் ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ காமேஸ்வரர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ வெற்றி வாராஹி அம்மன், ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் ஆகியவற்றுக்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔