விருதுநகர் மாவட்டம் பாவாலி கிராமத்தில் பொதுமக்கள் விடுத்த புகார்களைத் தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பினர் செல்வம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கிராமத்தில் உள்ள மயானத்திற்குச் செல்ல முறையான பாதை வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக அவரிடம் முறையிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய எம்எல்ஏ செல்வம், மயானத்திற்குச் செல்லும் பாதையைச் சீரமைப்பதற்காக ஏற்கனவே ரூ. 13.69 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இதற்கான அனுமதி கிடைத்தவுடன் நிலத்தைக் கையகப்படுத்தி, பாதையைச் சீரமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

