தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, விருதுநகர் மேல ரத வீதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மக்கள் நீதி மய்யம் (மநீம) சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கட்சிச் சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்விற்கு மாவட்டச் செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் நகரச் செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

