Settings

முகப்பு/நகரங்கள்/நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் நிலவரம்: தங்கம், வெள்ளியுடன் லட்சக்கணக்கில் குவிந்த காணிக்கை!
நகரங்கள்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் நிலவரம்: தங்கம், வெள்ளியுடன் லட்சக்கணக்கில் குவிந்த காணிக்கை!

🕒 3 நவ., 2026, 04:06 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் நிலவரம்: தங்கம், வெள்ளியுடன் லட்சக்கணக்கில் குவிந்த காணிக்கை! - படம் 1
📸1 / 1
✨

AI Highlights

  • •நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் இணை கோவில்களின் உண்டியல்கள் திறக்கப்பட்டதில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.62,10,573 ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்கள் வசூலாகியுள்ளன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் மற்றும் இணை கோவில்களின் உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் ஆன 18 அடி உயர ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் 6 உண்டியல்களும், நரசிம்மசாமி கோவிலில் 4 உண்டியல்களும், அரங்கநாதர் சாமி கோவிலில் 2 உண்டியல்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் வழக்கமாக 3 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி, ஆஞ்சநேயர் கோவில் செயல் அலுவலர் சந்திரன் மற்றும் திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில் செயல் அலுவலர் சின்னத்துரை ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் இன்று திறக்கப்பட்டு, கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் இரவு 9.00 மணி வரை எண்ணும் பணி நடைபெற்றது.

இந்த உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின் முடிவில், ரொக்கமாக ரூ.62,10,573 இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், 133 கிராம் தங்கமும், 190 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔