தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் நவம்பர் 2ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார். இந்நிலையில், அவர் திறக்கவுள்ள புதிய பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 'புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம்' என்ற பெயர்ப்பலகை இன்று அதிகாரிகளால் கழற்றி அகற்றப்பட்டது.
முன்னதாக, இப்பேருந்து நிலையக் கட்டிடங்களுக்கு இளம்பச்சை வண்ணம் பூசப்பட்டிருந்த நிலையில், அண்மையில் அந்த நிறம் மாற்றப்பட்டது . தற்போது பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளதால், அதில் புதிய வண்ணம் தீட்டப்படவுள்ளதா அல்லது வேறு பெயர்ப்பலகை மாற்றப்படவுள்ளதா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

