Settings

முகப்பு/நகரங்கள்/பசும்பொன் தேவர் குருபூஜை: கோலாகலமாகத் தொடங்கியது யாகசாலை பூஜைகள்!
நகரங்கள்

பசும்பொன் தேவர் குருபூஜை: கோலாகலமாகத் தொடங்கியது யாகசாலை பூஜைகள்!

🕒 29 அக்., 2026, 07:59 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
✨

AI Highlights

  • •ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

வரும் 30-ஆம் தேதி நடைபெறும் தேவர் குருபூஜை விழாவையொட்டி, இன்று (29-ஆம் தேதி) ஆன்மிக விழாவும், அரசியல் விழாவும் நடைபெறுகின்றன. நாளை (30-ஆம் தேதி) அரசு விழாவாகக் கொண்டாடப்படவுள்ளது.

இன்று காலை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் ஆன்மிக விழா தொடங்கியது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் ஏற்பாட்டில், சங்கர் குருக்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கணபதி ஹோமம், லட்சார்ச்சனை மற்றும் பூர்ணாஹூதி நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் மற்றும் இசை வாத்தியங்களுடன் கடம் புறப்பட்டு, கும்பநீர் எடுத்துச் சென்று பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்குப் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடத்தினர்.

வரும் 30-ஆம் தேதி நடைபெறும் விழாவில், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர். அதன்படி, தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக முன்னாள் அமைச்சர்களும், தவெக சார்பில் அமைச்சர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினரும், அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்களும் அஞ்சலி செலுத்த உள்ளனர். மேலும், துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக, மதிமுக, அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔