Settings

முகப்பு/நகரங்கள்/புதுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி: ஆட்சியர் மு.அருணா தொடங்கி வைத்தார்
நகரங்கள்

புதுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி: ஆட்சியர் மு.அருணா தொடங்கி வைத்தார்

🕒 29 அக்., 2026, 09:19 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
✨

AI Highlights

  • •புதுக்கோட்டையில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் மு.அருணா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

புதுக்கோட்டையில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் மு. அருணா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பழைய பேருந்து நிலையத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரப் பேரணி இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மு. அருணா தொடங்கி வைத்தார்.

இப்பேரணியில் புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளர்கள் ஜவஹர், பீட்டர் மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்தப் பேரணியானது முக்கிய வீதிகள் வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔