மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் முனைவோருக்கான கடன் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில், தொழில் முனைவோருக்கான பண்புகள் மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தொடர்ந்து, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ராஜராஜனுக்கு ரூ.13.87 லட்சம் மதிப்பிலான வாகனத்தின் சாவியையும், மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்பனையகம் தொடங்க ரவிஷ்தியாவுக்கு ரூ.4 லட்சம் கடன் ஒப்புதல் ஆணையையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும், வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மளிகைக் கடை தொடங்க சோபியாவுக்கு ரூ.9 லட்சமும், மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மளிகைக் கடை தொடங்க ரஞ்சிதாவுக்கு ரூ.3.02 லட்சமும் என மொத்தம் நான்கு பயனாளிகளுக்கு ரூ.29.89 லட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது.
இந்ிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லியோ ஃபாண்டின் நாதன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.


