Settings

முகப்பு/நகரங்கள்/சுடுகாட்டில் ரகசியமாக கஞ்சா விற்பனை! எலக்ட்ரீசியனுக்கு வலைவிரித்து பிடித்த போலீசார்!
நகரங்கள்

சுடுகாட்டில் ரகசியமாக கஞ்சா விற்பனை! எலக்ட்ரீசியனுக்கு வலைவிரித்து பிடித்த போலீசார்!

🕒 3 நவ., 2026, 09:04 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சுடுகாட்டில் ரகசியமாக கஞ்சா விற்பனை! எலக்ட்ரீசியனுக்கு வலைவிரித்து பிடித்த போலீசார்! - படம் 1
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சுடுகாட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்து 350 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வான்றன்தாங்கல் பகுதியில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட எலக்ட்ரீசியனை போலீசார் கையும் களவுமாகப் பிடித்து சிறையில் அடைத்தனர்.

காட்பாடி பகுதியில் உள்ள சுடுகாட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் காட்பாடி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் பிரசாந்த் (30) என்பதும், அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, பிரசாந்தைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 350 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔